நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா?
- admin
- Category: உடல் நலம்
- Hits: 173
நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான வழிமுறைகளை பின்பற்றினால் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
? தினமும் ஒரு டம்ளர் மாதுளை பழச்சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள இரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை எனப் பல பிரச்சனைகளை போக்கலாம்.
? ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால், ஆப்பிளை தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
? பூண்டை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக அதிகரிக்கும். மேலும், இது வெள்ளை அணுக்களை அதிகம் உற்பத்தி செய்வதோடு, புற்றுநோய் உருவாக்கும் செல்களை உருவாக்காமலும் தடுக்கிறது.
? வைட்டமின் பி6 தர்பூசணியில் அதிகமாக உள்ளது. தினமும் உணவில் தர்பூசணி துண்டுகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் மன அழுத்தம் குறையும்.
? பச்சைப் பயிறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கிறது.
? உடலில் சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்க புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
? அடிக்கடி உணவில் சுண்டைக்காயை சேர்த்தால் நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை போன்றவை குணமாகும்.
? வாரம் மூன்று முறை பொன்னாங்கண்ணிக் கீரையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண் சம்பந்தமான நோய்கள் வராது.
? வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் உணவு பொருட்கள் ஆகும்.