Switch Language:   English | தமிழ்

    Sony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்

    கவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்துவரும் Sony Xperia நிறுவனம், Sony Xperia M2 Aqua எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இக்கைப்பேசியானது 4.8 அங்குல அளவு, 540 x 960 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad Core Qualcomm Snapdragon 400 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளது.

    இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்கான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.

    மேலும் இக்கைப்பேசியானது கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.