Switch Language:   English | தமிழ்

    LG அதிரடி வசதியுடன் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி

    ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏற்பட்டுவரும் போட்டி காரணமாக ஒவ்வொரு நிறுவனங்களும் பல்வேறு தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்கின்றன.

    இதன் வரிசையில் தற்போது LG நிறுவனம் MicroSD கார்ட்டின் உதவியுடன் சேமிப்பு கொள்ளளவை 2TB வரை அதிகரிக்கக்கூடிய வசதியுடன் தனது புதிய G3 கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

    இதன் திரையானது 5.5 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடையதாகக் காணப்படுகின்றது.

    மேலும் Android 4.4.2 Kitkat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியில் Snapdragon 801 SoC Processor, மற்றும் 3GB RAM ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

    இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.