கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது
- Kaju
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 124
பாதுகாப்புக் குறைபாடு இருந்ததாகவும் 5 கோடி பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் முகநூல் நிறுவனம் கூறியது.
இதனிடையே மற்றொரு சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் பயனாளர்களின் கணக்குகளைப் பராமரிப்பதில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும், அதனை சரியான முறையில் கண்டறிந்து தீர்வைத் தேடுவதற்கு அந்நிறுவனம் தவறி விட்டதாகவும் வால்ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற அமெரிக்க நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரபரப்பு அடங்குவதற்குள் கூகுள் பிளஸ் என்ற சமூக வலையமைப்பு தளத்தை மூடப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போதுமான பயனார்களை ஈர்க்கத்தவறி விட்டதாலும், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் விரிவான சேவையை வழங்க முடியாத சூழல் இருந்து வருவதாலும் கூகுள் பிளஸ் சேவை மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.