இன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்
- admin
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 133
புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் பகிர்ந்து மகிழும் வசதியை தருகின்ற பிரம்மாண்டமான தளமாக இன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.
இத் தளமானது தற்போது புதிய வசதி ஒன்றினை வழங்க முன்வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் சொப்பிங் சேவை என அழைக்கப்படும் இவ் வசதியின் ஊடாக முன்னணி நிறுவனங்கள் தமது விற்பனை பொருட்கள் தொடர்பான பதிவுகளை இங்கு இடலாம்.
பயனர்கள் அவற்றினைப் பார்வையிட்டு அவசியம் எனின் அல்லது விரும்பின் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.
இவ் வசதி தற்போது ஐக்கிய இராச்சியத்தில் மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் Australia, Brazil, Canada, France, Italy, Spain மற்றும் Germany ஆகிய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.