அதிகளவு Mobile Data பயன்படுத்தும் நாடுகளில் பட்டியல்: முதலிடத்தில் இந்தியா.
- admin
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 354
அதிகளவு ‘Mobile Data' பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் மாதத்திற்கு 150 கோடி ஜிபி என்ற அளவில் Mobile Data பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அதிக அளவு Mobile Data பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில், உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், மாதம் 150 கோடி ஜிபி Data பயன்படுத்தப்படும் நிலையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் சீனாவை ஒன்றிணைத்தாலும், இந்திய Mobile Data பயன்பாடு அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஊக்லா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிவேக Broadband வழங்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா 109வது இடம் பிடித்துள்ளது, இந்தியாவில் தரவிறக்கம் செய்வதற்கான வேகம் வினாடிக்கு 8.80Mb ஆக அதிகரித்துள்ளது. இந்த பட்டியில் வினாடிக்கு 62.66Mb வேகம் வழங்கி வரும் நோர்வே முதலிடத்தில் உள்ளது. மேலும், அதிகளவு Broadband வேகமாக 153.85Mb வழங்கிய சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.