Switch Language:   English | தமிழ்

    BlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்

    BlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்து வருகின்றது.

    இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாகவும், 1.5GHz வேகத்தில் செயல்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

    இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ள இக்கைப்பேசி இந்த மாதம் அல்லது ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.