ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியராக ரோபோ
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 143
பின்லாந்து ஆரம்பப் பாடசாலையொன்று மொழி ஆசிரியர் பணிக்கு பல மொழிகளில் உரையாடும் வல்லமையைக் கொண்ட ரோபோவொன்றை நியமித்துள்ளது.
இந்த எலியாஸ் என்றழைக்கப்படும் ரோபோ பின்லாந்தின் தென் நகரான தம்பெரேயிலுள்ள ஆரம்பப் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 4 ரோபோக்களில் ஒன்றாகும்.
ஆங்கிலம், பின்னிஷ் மொழி, ஜேர்மன் உள்ளடங்கலாக 23 மொழிகளைப் புரிந்து கொண்டு உரையாடக் கூடிய இந்த ரோபோ, மாணவர்களுக்கு முடிவற்ற பொறுமை யுடன் கற்பித்தலை மேற்கொள்ளக் கூடியது எனக் கூறப்படுகிறது.
அந்த ரோபோவில் உள்ளீடு செய்யப்பட்டுள்ள மென்பொருளானது மாணவர்களின் தேவைப்பாடுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயற்படும் ஆற்றலை ரோபோவுக்கு அளிப்பதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.