காயங்களை குணப்படுத்தும் எலக்ட்ரிக் ஷாக்!
- Editor
- Category: உடல் நலம்
- Hits: 294
அடிபட்ட காயங்களை குணப்படுத்துவதற்கு இன்று மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் இதற்கும் மேலாக எலக்ட்ரிக் சிக்னல் மூலமும் காயங்களை குணப்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஒன்றின் ஊடாக இவ் உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது காயம் அடைந்த பகுதியினைச் சுற்றி எலக்ட்ரிக் சிக்னல் ஊடாக ஷாக் கொடுக்கும்போது அப் பகுதியில் உள்ள கலங்கள் இடப் பெயர்ச்சி அடைந்து காயமடைந்த பகுதியில் நிலைக்க ஆரம்பிக்கின்றன.
இதனால் இம் முறையின் ஊடாக ஏனைய முறைகளை விடவும் விரைவாக காயங்களை குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இம் முறையின் ஊடாக நீரிழிவு நோயாளிகளில் ஏற்பட்டுள்ள காயங்களையும் குணப்படுத்து முடியும் எனவும், இதற்கு அவர்களின் உடல் நிலையைக் அறிந்துகொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.