Switch Language:   English | தமிழ்

    முயற்சித்தால் வெற்றி பெறலாம், இதன் இரகசியம்

    வாழ்கையில் மிக உயந்த நிலையில் பல வெற்றி பெற்று சாதனைகள் புரிந்தவர்களிடம் “இந்த உயர்ந்த கௌரவமிக்க பல வெற்றியை எவ்வாறு அடைந்தார்கள் என்பதன் ரகயம் என்ன தெரியுமா?

    இலட்சியத்தை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும். இது தான் வாழ்கையில் அடைந்த வெற்றிக்கான இரகசியம்”

    இவ்வளவு தானா? இந்த எளிமையான வார்த்தைகளை ஏற்கனவே புத்தகங்களில் பலமுறை படித்த விஷயம் தான், புதிதாக ஒன்றுமில்லையே என நினைக்காதீர்கள்.

    தொடர்ந்து பொறுமையாக படியுங்கள் வெற்றி உங்களுக்கே...! 

    ஒரு முறை முயற்சி செய்து தோல்வி அடைந்தீர்கள் எனில் மீண்டும் என்ன செய்தீர்கள்? ”

    “மீண்டும் அதே முயற்சியை தொடர்ந்தேன். மீண்டும் தோல்வி தான் கிடைத்தது”.

    “இங்கு தான் அனைவரும் தவறு செய்கின்றனர். நீங்கள் ஒரு முறை அல்லது இரு முறை முயன்று தோல்வி அடைந்தீர்களென்றால் நீங்கள் செய்யும் முயற்சி முறை அல்லது நீங்கள் செல்லும் பாதையில் தவறு இருக்கின்றது.

    நீங்கள் ஒவ்வொரு முறை முயற்சி செய்யும் போது தோல்வி அடைந்த முறையையோ அல்லது முன்பு சென்ற பாதையிலேயே முயற்சி செய்துகொண்டே இருந்தால் நிச்சயம் நீங்கள் உங்கள் வாழ்க்கை முடியும் வரை தோல்வியைத்தான் தழுவுவீர்கள் . வெற்றி கிடைப்பது அரிது தான்.”

    உதாரணமாக தோமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடிக்க ஒரே இழையை வைத்து ஆராய்ச்சியை தொடர்ந்து செய்து கொண்டே வந்திருந்தால் நிச்சயம் நமக்கு மின்சார விளக்கு கிடைத்திருக்காது. அவர் கிட்டத்தட்ட 1000 வகையான இழைகளைக் கொண்டு தொடர்ந்து புது புது முறையில் முயற்சி செய்ததினால் தான் இந்த மகத்தான வெற்றி அவருக்கு கிடைத்திருக்கின்றது.

    இந்திய சுதந்திரம் பலவழிகளில் முயன்று அதாவது உண்ணாவிரதம், ஒத்துழையாமை, பல போராட்டங்கள், சத்யாகிரகம், சுதேசி இயக்கம் போன்றவையெல்லாம் கையாண்டு கடைசியில் ‘அஹிம்சை’ வழியில் தான் நாம் சுதந்திரம் அடைந்துள்ளது.

    அதாவது நீங்கள் ஒவ்வொரு முறை முயற்சி செய்யும்போது நீங்கள் செய்த முயற்சியில் ஏதேனும் தவறுதல் இருக்கின்றனவா? என்று ஆராய வேண்டும். அப்படி எதிர்பார்த்தது நடக்கவில்லையென்றால் வேறு என்ன வழி ? என்று சிந்திக்க வேண்டும். பிறகு அந்த வழியை எவ்வாறு தேர்வு செய்வது ? எப்படி திட்டமிடுவது ? யாரைக்கொண்டு அடைவது? என்பதை தெளிவாக ஒரு காகிதத்தில் எழுதி அதை பலமுறை படிக்கவேடும் . அப்படி படிக்கும் போதே நீங்கள் செய்த தவறுகளும், அதை எப்படி திருத்தி செய்யவேண்டிய முறையினையும் உங்களுக்கு தெளிவாக தெரியும்.

    மீண்டும் முயற்சி! மீண்டும் ஒருவேளை தோல்வி அடைந்தால் மீண்டும் நீங்கள் செய்த முறை அல்லது பாதையினை சற்று மாற்றி அமைத்து இடைவிடாது முயற்சி செய்யும்போது உங்கள் தோல்வி இருள் மறைந்து வெற்றி ஒளி படர ஆரம்பிக்கும். இந்த முயற்சியின் தோல்வி தான் பல துறைகளில் வெற்றி பெற உதவிடும் படிக்கட்டு.

    மேலும் விளையாட்டில், அரசியலில், கல்வியில், தொழிலில், ஆன்மீகத்தில், அன்றாட வேலைகளில் பலர் இந்த வகையில் தான் முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்”.

    நீங்களும் முயற்சியின் பல முறைகளை பின்பற்றி வெற்றி பல அடையுங்கள்.