பேஸ்புக் முதலிடத்தில்; வாட்ஸ்அப் இரண்டாவது இடம்!!
- MSF.Nadhwa
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 606
இன்றைய இளைய தலைமுறையினரை மட்டுமல்லாமல், எல்லோரையும் தன் வசப்படுத்தியிருக்கிறது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்.
காலை முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை நம்மில் பெரும்பாலானவர்கள் இந்த இரு சமூக வலைதளங்களுடன் இருக்கிறோம்.
செய்தி என்னவெனில், ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக் பக்கத்தை 135 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள்.
அதே போல வாட்ஸ்அப்பை 70 கோடி பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப் மூலம் நாள் ஒன்றுக்கு 3000 கோடி மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன.
சமூக வலைதள பயன்பாட்டில் உலக அளவில் ஃபேஸ்புக் முதலிடத்திலும், வாட்ஸ்அப் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.
இதற்கு அடுத்ததாக ஃபேஸ்புக் மெஜெஞ்சரை 50 கோடி பயனாளர்களும், 30 கோடி மில்லியன் பயனாளர்கள் இன்ஸ்டாகிராமையும், 24.80 கோடி பயனாளர்கள் டுவிட்டரையும் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.