மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க இதோ வழி!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 818
பெண்களை தற்போது அதிகளவில் தாக்கிவரும் வியாதியாக மார்பக புற்றுநோய் காணப்படுகின்றது. இதனால் இந்நோயை குணப்படுத்துவதற்கான ஆய்வுகள் முழு வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் வாரம் ஒன்றிற்கு 7 மணித்தியாலங்களுக்கு மேல் நடைப்பயிற்சியினை மேற்கொள்வதன் மூலம் இந்நோய்த்தாக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும் என ஓர் ஆய்வு முடிவு கூறுகின்றது.
73,615 பெண்களை வைத்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் நாள்தோறும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் பெண்களால் 25 சதவீதம் இந்நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் எனவும், வாரம் தோறும் 7 மணித்தியாலங்கள் நடைப்பதன் மூலம் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பு 14 சதவீதம் காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள American Cancer Society ஆய்விலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.