Switch Language:   English | தமிழ்

    சிறுவனும் வேர்க்கடலையும்

    ஒரு சிறுவன் வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு ஜாடி கீழே கிடப்பதைக் கண்டான். அந்த ஜாடி சிறிய கழுத்து பகுதியை கொண்டதாகவும், முழுவதும் வேர்க்கடலை நிரம்பியதாகவும் இருந்தது. வேர்க்கடலையைக் கண்டதும் சிறுவன் அதை சாப்பிடுவதற்கு ஆசைப்பட்டான். எனவே, பதற்றத்துடன் அவன் தன் கையை ஜாடிக்குள் விட்டு, கை நிறைய வேர்க்கடலைகளை எடுக்க முயன்றான். ஆனால், அவன் கையை வெளியே எடுக்க முயன்றபோது, அவனால் கைகளை வெளியே எடுக்க முடியவில்லை. எனவே, அவன் ஏமாற்றமாக உணர்ந்து அழ ஆரம்பித்தான்.

    ஒரு மனிதர் தூரத்தில் இருந்து சிறுவனின் நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் சிறுவனிடம் வந்து அவசரப்படாதே, பாதி வேர்க்கடலைகளை மட்டும் எடுத்தால், நீ உன் கையை வெளியே எடுக்க முடியும். நீ இரண்டாவது தடவை மீதிப்பாதியை எடுத்துக் கொள்ளலாம், என்றார்.

    அவர் கூறியது போல் சிறுவன் செய்தான், வேர்க்கடலைகளை எடுத்து சந்தோஷமானான். அவன் அந்த மனிதருக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றான்.

    நீதி : பதறிய காரியம் சிதறும்.