அழிந்த File களை மீளப்பெற Software தரவிறக்கம் செய்வதற்கு
- MSF.Nadhwa
- Category: கணனி
- Hits: 1351
கணனிகளின் உதவியுடன் வன்றட்டுக்கள் மற்றும் ஏனைய சேமிப்பு சாதனங்களில் சேமிக்கப்படும் கோப்புக்களை சில சமயங்களில் இழக்க நேரிடலாம்.
இவ்வாறு கோப்புக்களை தவறவிட்டு அவதிப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த கோப்புக்களை மீட்பதற்காக பல்வேறு மென்பொருட்கள் பேருதவியாக அமைகின்றன.
அவற்றின் அடிப்படையில் iFileRecovery எனும் மென்பொருளானது பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது Format செய்யப்பட்ட Compact Flash, Smart Media, SD Card, Memory Sticks, USB Flash devices, San Disk போன்ற சேமிப்பு சாதனங்களில் உள்ள கோப்புக்கள், வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கோப்புக்கள் போன்றவற்றை இலகுவாக மீட்டுத்தருகின்றது.
மேலும் NTFS மற்றும் FAT32 போன்றவற்றில் காணப்படுகின்ற Documents, Photos, Video, Music, Folder போன்றவற்றினையும் மீட்கக்கூடியவாறு காணப்படுகின்றது.