வேலையில் நீங்க டொப்பாக இருக்க வேண்டுமா ?
- admin
- Category: ஆலோசனை
- Hits: 107
இது வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் உலகம். இங்கு நாட்டின் கலாச்சாரக் கட்டமைப்பு நாளுக்கு நாள் மாற்றமடைந்து கொண்டே வருகிறது. நீங்களும் அந்த மாற்றங்களுக்கேற்ப இணைந்து உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், நீங்கள் பின்தங்கி விடுவீர்கள். நீங்கள் கற்றுக் கொள்வதையும் உங்களை மேம்படுத்திக் கொள்வதையும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் அதிவேகமாக வெற்றியின் எல்லையைத் தொடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற கற்றுக் கொள்வதற்கான சில வழிகள்!
? உங்கள் படைப்பாற்றலானது உங்களைச் சக பணியாளர்கள் மற்றும் மற்ற போட்டியாளர்களிடமிருந்து தனித்துச் செயல்பட மட்டும் உதவுவதில்லை, மேலும் உங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் போட்டியாளர்களை உங்களை நோக்கிக் கவனிக்கவும் செய்கிறது.
? உங்கள் வளர்ச்சியை முடக்கிவிடும் பொருட்டு நாளும் மாற்றமடைந்து கொண்டே இருக்கும். வேலைகளின் தேவைகளுக்கேற்ப உங்களைப் மாற்றிக் கொள்வது அவசியமானதாகும். சுறுசுறுப்பும், விரைவாகப் புரிந்துக கொள்ளும் தன்மை உங்களின் நிறுவனத்திற்கு மட்டுமல்ல உங்கள் சுய மதிப்பிற்கும் மதிப்பைக் கூட்டுகிறது.
? உங்கள் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை முயற்சித்துப் பார்ப்பது அத்தியாவசியமானதாகும். நீங்கள் மேம்படுத்த விரும்புவதைக் குறுகிய காலத் திட்டத்தில் செயல்படுத்திக் குறித்து வைத்துக் கொள்வதுடன் பின்னாளில் நீண்ட காலத் திட்டங்களில் அது உங்கள் திறமையை நாளடைவில் மேம்படுத்திக் கொள்ள உதவும்.
? உங்கள் தொழில் வாழ்க்கையில் உங்களைப் புதிய தொடர்புகளுடன் இணைத்துக் கொள்வது தேவைப்படுகிறது. இது உங்களைப் புதிய தொடர்புகளுடன் இணைப்பதில் உதவி புரிவது மட்டுமல்லாமல் மேலும் உங்கள் வேலையில் உதவியாக இருக்கும் தொலைநோக்கு கண்ணோட்டத்தையும் உங்களுக்கு வழங்குகிறது.
? உங்கள் ஆற்றலை நீட்டிக்கும் மற்றும் உங்கள் பலத்தைச் சோதனை செய்ய உதவும் பொறுப்புகளை ஏற்கக் கூச்சப்படாதீர்கள்.
? உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைக்குள் அடங்காத வேலைகளையும் செய்ய வேண்டியது சமமான முக்கியதுவத்தைப் பெறுகிறது. வேலையிடத்தில் வேலை ஓட்டம் மென்மையாக நகர, தினமும் கூடுதல் கடமைகளை எழுதி வையுங்கள்.
? உங்கள் பலவீனமான புள்ளிகளைச் சமாளிக்கத் தொடர்ச்சியாகக் கருத்துப் பின்னூட்டங்களைத் தேடுங்கள். கருத்துப் பின்னூட்டங்கள் என்பவை சிக்கலான அடிப்படையின் ஆதாரக் கூறுகளாகும்.
? எது அவசரம் மற்றும் எது முக்கியம் என்பதற்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். அவசரமும் முக்கியத்துவமும் கைகோர்த்து இருக்கிறது. அதை சமாளிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
? நெருக்கடியான சூழ்நிலைகளில் என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே அங்கேயே தேங்கிவிட்டு நேரத்தை வீணாக்காதீர்கள், பிரச்சனைகளை எதிர்கொண்டு அதன் மீது செயல்படுங்கள். நிதானமாக அனுமதி கேட்பதைவிட, மன்னிப்பு கேட்பது எப்பொழுதும் மிகுந்த நன்மைப்பயக்கக் கூடியது.
கற்றுக் கொள்ளுதல் என்பது பலவீனத்தின் குறியீடு அல்ல, அது ஒரு வலிமையின் குறியீடு. இவற்றை பின்பற்றினாலே போதும், வேலையில் நீங்க டாப்புதான்..!