உங்கள் வாழ்க்கையை வளமாக்க நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் !
- admin
- Category: ஆலோசனை
- Hits: 114
நமது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வதற்கு அடிப்படையாக சில விஷயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவை என்ன என்பதை இன்று அறிந்துக் கொள்வோம்.
? நமது எண்ணங்களே நமது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. எனவே உயரிய எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
? நமது வாழ்க்கையின் நோக்கத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். எந்த செயலை செய்யும்பொழுது மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது, எதை செய்யும்பொழுது மனம் கவலை கொள்கிறது, எதனால் மனம் புத்துணர்ச்சி அடைகிறது என்பதை நன்றாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.
? நம்மை பற்றி நாம் நன்றாக தெரிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அதை பொறுத்துதான் நம் வாழ்க்கையின் வெற்றி தோல்வி அமைகிறது.
? நமக்கென்று குறிக்கோள்கள் இருக்க வேண்டும். ஏனெனில், அவைதான் நமது செயல்களை ஒருமுகப்படுத்துகிறது.
? ஒரு செயலை செய்வது எளிது என்று கூறி விடலாம். ஆனால், அதை கூறிய வண்ணமே செய்வதுதான் கடினம். ஆனால், அத்தகைய பண்பை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
? அனைவருக்குமே ஆற்றல் இருக்கிறது. ஆனால் அவற்றை கையாளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறு காரியங்களில் அதிக ஆற்றலை செலவிடுவதை தவிர்த்தால்தான் உரிய காரியங்களில் ஆற்றலை செலுத்தி நமது குறிக்கோள்களை அடைய முடியும்.
? நடந்து முடிந்த விஷயங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அவற்றில் இருக்கும் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதை தவிர்த்து, முடிந்த விஷயங்களைப் பற்றி கவலைக் கொள்ளக் கூடாது.
? தன்னம்பிக்கை தான் நமது தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் நம்மை தாங்கி நிற்கிறது. எனவே, நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
? மேற்கூறிய இந்த விஷயங்களை நீங்கள் கற்றுக் கொண்டால், உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.