தன்னம்பிக்கை தரும் வெற்றி வரிகள் !
- admin
- Category: ஆலோசனை
- Hits: 190
பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.
? வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள். வேலை பாதுகாப்பை கருதி ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். புதிய முயற்சிகளால் மட்டுமே முன்னேற்றத்தை காண முடியும்.
? மற்றவர்களையும் உங்களுக்காக உழைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே நல்ல தலைவனாக இருக்க முடியும் என்பதை உணருங்கள்.
? கீழே விழுவது அவமானம் அல்ல. ஆனால், விழுந்தும் எழாமல் இருப்பதே அவமானம் ஆகும். ஆகையால், விழுவதைப்பற்றி கவலைப்படாதீர்கள். அது வெற்றியின் ஏணிப்படி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
? வாழ்க்கையில் வரும் சில எதிர்பாராத பிரச்சனைகளை ஆளுவதற்கு தயாராக இருங்கள். பிரச்சனை உங்களை ஆளுவதற்கு அல்ல, நீங்கள் பிரச்சனையை ஆளுவதற்கு தயாராகுங்கள்.
? உங்களது 100 சதவிகித உழைப்பை நீங்கள் செய்ய விரும்பும் செயலில் செலுத்துங்கள். அந்த நொடியே, அந்த செயலுக்கான வெற்றியும் மகிழ்ச்சியும் நிர்ணயக்கப்பட்டு விடுகிறது.
? செய்ய முடியும் என்று நம்புங்கள். ஒன்றை செய்ய முடியும் என்று நீங்கள் முழுவதுமாய் நம்பும்போது, அந்த செயலை செய்து முடிப்பதற்கான வழிகளை நீங்களே கண்டறிவீர்கள்.
? வெற்றி என்பது ஒரு பொழுதில் கிடைப்பதில்லை. மற்றவர்கள் கைவிட்ட பின்பும், நீங்கள் எடுத்தக் காரியத்தில் மேற்கொள்ளும் விடாமுயற்சியே வெற்றிக்கு வழிவகுக்கிறது.
? நீங்கள் சலித்துக் கொண்டால், ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்ப்பீர்கள். சாதிக்க விரும்பினால், ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினை அறிவீர்கள்.
? உலகமே உங்களை திரும்பி பார்க்க வேண்டுமா? அப்படியெனில், அன்றாட வாழ்வின் சாதாரண விஷயங்களையும், அசாதாரண முறையில் செய்து பாருங்கள். உலகின் கவனம் உங்கள் மீது திரும்புவதை நீங்கள் உணருவீர்கள்.
? சூழ்நிலை அமையவில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளாதீர்கள். நீங்கள் வெற்றியாளராக வலம் வர வேண்டுமெனில், அத்தகைய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.