நீங்கள் வேலை செய்யும் சூழலில் செய்யக்கூடாத விடயங்கள்!
- admin
- Category: ஆலோசனை
- Hits: 112
பணிசூழலானது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால்தான், நமது செயல்திறன் அதிகரிக்கக்கூடும் என்பதை நாம் அறிவோம். அவ்வாறு இருக்க நாமும் முயல்கிறோம், இருப்பினும் நாம் செய்யும் சில சிறு காரியங்கள் ஆரோக்கியமான பணிச்சூழலை பாதிக்கின்றன. அவை என்ன என்று அறிந்துக் கொள்வோம்.
? அலைப்பேசியை அமர்ந்த இடத்தில் இருந்து பயன்படுத்துதல்
? அலுவலக மின்னஞ்சலை தனிப்பட்ட விஷயங்களுக்காக பயன்படுத்துதல்
? சக ஊழியர்களைப் பற்றி வதந்திகளை பரப்புதல்
? அலுவலக கணினி அல்லது இணைய வசதி மூலமாக சமூக வளைத்தளங்களில் நேரத்தை கடத்துதல்
? உங்களை நல்ல விதமாக காட்டிக் கொள்ள பொய் கூறுதல்
? உடல்நிலை சரியற்ற நிலையில் அலுவலகத்திற்கு வருகை தருவது, அதன் மூலம் நீங்கள் கடின உழைப்பாளி என்று காட்டிக் கொள்ள முயலுதல்
உங்கள் திறமைக்கும் படிப்பிற்கும் தகுதியான வேலையைத் தேடி நீங்கள் எங்கும் அலைய வேண்டாம். அரசாங்க வேலை முதல் தனியார் வேலை வரை அனைத்து துறைகளிலும் உள்ள காலிபணியிடங்களை வீட்டிலிருந்தே அறிந்துகொள்ள நமது நித்ராவின் இலவச வேலைவாய்ப்பு செயலியை
இங்கே கிளிக் செய்து உடனே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் !!!
? கோவமாக இருக்கும் பொழுது பதில் அளித்தல்
? சக ஊழியர்களை அடிக்கடி தொந்தரவு செய்தல்
? பிறருக்கு மன உலைச்சலை உண்டாக்கி, நமது மரியாதையை நாமே குறைத்துக் கொள்ளுதல்
? நமது தோற்றம், மனப்பான்மை மற்றும் செயல்கள் எவ்வாறு மற்றவர்கள் மனதில் முத்திரை பதிக்கிறது என்பதை கவனிக்காமல் இருத்தல்
? மற்றவர்களை எரிச்சலூட்டும் வகையில் அதிகப்படியான வாசனைதிரவியத்தைப் பயன்படுத்துதல்
? காதொலிப்பான் இல்லாமல் இசையை சத்தமாக ஒலிக்கச் செய்தல்
? அலுவலகங்களில் அலைபேசியை அமைதி நிலையில் வைக்க மறுத்தல்
? மற்றவர்களின் பொருளை அவர்களிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்துதல் அல்லது நாமே வைத்துக் கொள்ளுதல்
? உங்களது தனிப்பட்ட உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாமல் இருத்தல் மற்றும் யாரிடம் கூறுவது, எப்பொழுது கூறுவது என்பதை அறியாமல் இருத்தல்
? அதிகாரம் கொண்டு மற்றவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்குதல்
? மற்ற அலுவலக விஷயங்கள் மீது ஈடுபாடு இல்லாமல் தனித்து இருக்க முயலுதல்
? சக ஊழியர்களிடையே உங்கள் மீதான நம்பிக்கையை காப்பாற்ற தவறுதல்
? பிரச்சனைகளை தீர்க்க முயலாமல் அவற்றை உருவாக்குதல்
? மன உலைச்சலால் பிறரிடம் சிணுங்குதல் அல்லது கத்துதல்
? எப்பொழுதும் நாம் கூறுவது மட்டுமே சரி என்று விவாதித்தல்
? மேற்கூறிய செயல்களை தவிர்த்தால், நமது பணிச்சூழல் மிக ஆரோக்கியமானதாக மாறிவிடும்.