Switch Language:   English | தமிழ்

    ரொபொமயா நுளம்பினம் தொடர்பில் ஆய்வு..

    104 வருடங்களுக்குப் பின்னர் இலங்கையில் இனங்காணப்பட்ட ரொபொமயா நுளம்பினம் தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
    இந்த நுளம்பினம் தொடர்பில் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

    இதுவரை 140 நுளம்பினங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதில் 16 பிரிவுகள் அடங்குவதாகவும் மருத்துவ ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

    ரொபாமயா நுளம்பு டெங்கு குடம்பிகளை உட்கொள்ளும் சாத்தியம் உள்ளதால் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு புதிய நுளம்பினத்தை பயன்படுத்துவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

    நுளம்பு நாசினிகளை விசுறுவதற்கு முடியாத இடங்களில் ரொபாமயா நுளம்பை பயன்படுத்தி டெங்கு நுளம்புகளை அழிக்க முடியுமா என்பது தொடர்பில் விரைவில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மருத்துவ ஆய்வு நிலையத்தின் வைத்திய நிபுணர் சாகரிக்கா சமரசிங்க தெரிவித்துள்ளார்.