சம்சா
- Editor
- Category: சமையல் குறிப்புகள்
- Hits: 375
என்னென்ன தேவை?
மைதா - 2 கப்,
நெய் அல்லது எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - 1 கப்,
ஓமம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
ஸ்டஃப்பிங்கிற்கு...
உருளைக்கிழங்கு - 3,
பச்சைப்பட்டாணி - 1 கப்,
பச்சைமிளகாய் - 1,
இஞ்சி - 1/2 துண்டு,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க..
இஞ்சி - 1/4 துண்டு,
பட்டை- 1/4 இஞ்ச் துண்டு 1,
கருப்பு மிளகு- 2,
கிராம்பு - 1,
ஏலக்காய்-1,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,
காய்ந்த மாதுளை விதைகள் - 2 டீஸ்பூன்,
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சம்சா மேல் மாவு தயாரிக்க...
மைதா மாவை எடுத்துக் கொண்டு உப்பு, எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிசையவும். மாவை நன்கு பிசைந்து துணியால் மூடி அரை மணிநேரம் முதல் முக்கால் மணிநேரம் வரை வைக்கவும். உருளைக்கிழங்கு, பட்டாணியை தனித்தனியே வேக வைக்கவும். பிறகு உருளைக் கிழங்கைத் தோல் உரித்து சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளவும். கொடுத்துள்ள காரப் பொருட்கள்அனைத்தையும் நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு சலித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு வறுக்கவும். இத்துடன் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது சேர்க்கவும். இத்துடன் பட்டாணி, மிளகாய் பொடி, மசாலா பொடிகள், பெருங்காயம் சேர்த்து வதக்கவும். இவை நன்கு
வதங்கியவுடன் எடுத்து ஆறவிட வேண்டும்.
பிசைந்து வைத்துள்ள மாவை வட்டமான சப்பாத்திகளாக இட்டு அதில் மேலே செய்துள்ள கலவையை வைத்து பின்னர் முக்கோணமாக மடித்து வைத்துக் கொள்ளவும். அதை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அதிக சூட்டில் பொரித்தால் கடையில் உள்ள சம்சா போல வராது. தணிந்த தீயில் பொரிக்க வேண்டும்.