மாம்பழ கேசரி
- Editor
- Category: சமையல் குறிப்புகள்
- Hits: 192
என்னென்ன தேவை?
ரவை - 1 1/2 கப்
மாம்பழம் -2
சர்க்கரை -1 கப்
முந்திரி -2ஸ்பூன்
திராட்சை -2ஸ்பூன
ஏலக்காய் -4
பால் பவுடர் -1ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
எப்படி செய்வது?
கடாயில் நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சை, இரண்டையும் தனிதனியாக வறுக்கவும். மீதமுள்ள நெயில் ரவையை கொட்டி வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.. பின்னர் கடாயில் ரவைக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஏலக்காய் போட்டு வேகவிடவும். சுத்தம் செய்துவைத்துள்ள பழத்த மாம்பழங்களை மிக்ஸரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
தண்ணீர் கொதிநிலையில் இருக்கும்போது ரவை கலந்து வேகவிடவும். பின்னர் அரைத்துவைத்துள்ள மாம்பழ விழுதை சேர்த்து தண்ணீர் வற்றும்வரை கிளறி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கிளறி நெய் சோத்து நன்றாக கிளறி, பால் பவுடர் சேர்க்கவும். பின்னர் வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்து கிளறினால் மாம்பழ கேசரி தயார்.