Switch Language:   English | தமிழ்

    சுவையான கஞ்சி காச்சுவது எப்படி?

    தேவையான பொருட்கள்:
    1.அரிசி (மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் கீ ரைஸ் அல்லது கொல்லம் ரைஸ் என்ற பெயரில் வரும் அரிசியை பாவிப்பது மிக்க ஏற்றமானது)
    2.தேங்காய் பால்
    3.சுத்தமாக கழுவி சிறிதாக வெட்டப்பட்ட கரட்,பீன்ஸ்,கோவா,லீக்ஸ் போன்ற மரக்கறிகள் சிறிதளவு

    4.சுத்தமாக கழுவி சிறிதாக வெட்டப்பட்ட எழும்புகளுடன் கூடிய மாட்டு இறைச்சி அல்லது ஆட்டிறைச்சி அல்லது கோழி
    5.இஞ்சி பூண்டு சட்ணி
    6.சிறிதாக வெட்டப்பட்ட வெங்காயம் சிறிதளவு
    7.ஏலம் கருவா சிறிதளவு
    8.மிளகாய் சிறிதளவு
    9.மிளகுத்தூள்
    10.எண்ணை
    11.கறிவேப்பிலை, ரம்பை இலை
    12. வெந்தயம் அல்லது உழுவரிசி
    13.தக்காளி

    செய்முறை:
    முதலில் அரிசியை நன்றாக கழுவி 3 மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைக்கவும்
    a.வெந்தயத்தையும் நன்றாக கழுவி எடுத்து அரிசியையும் வெந்தயத்தையும் பாத்திரத்தில் இட்டு அரிசியை விட ஐந்து மடங்கு நீர் இட்டு அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.

    b.சுமார் ஒரு மணி நேரம் வேகிய அரிசியினுள் தக்காளி, வெங்காயம், இஞ்சி பூண்டு சட்ணி,வெட்டப்பட்ட மரக்கறிகள்,இறைச்சி,உப்பு,மிளகாய் மிளகுத்தூள் என அனைத்தையும் சேர்த்து போதிய அளவு நீரும் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

    c.சுமார் அரை மணி நேரம் கழிந்த பின்னர் இறைச்சி நன்றாக வேகி இருப்பதை சரி பார்த்துகொண்டு தயாராக வைக்கப்பட்ட தேங்காய் பாலை கஞ்சி பாத்திரத்தில் சேர்க்கவும்.

    d.பிரிதொரு பாத்திரத்தில் தாளிக்கப்பட்ட கறிவேப்பிலை, ரம்பை, ஏலம், கருவா கலவையையும் கஞ்சிப்பாத்திரத்தில் சேர்க்கவும்.

    e.இடப்பட்ட அனைத்தும் நன்றாக வேகிய பின்னர் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி தேவையான நேரத்தில் சிறு பாத்திரங்களில் இட்டு பரிமாறவும்.

    f.இத்தோடு பிளண்டரில் தேங்காய் துருவல்,கரிவேப்பிலை,உப்பு,தேசிப்புளி,சிறிது வெங்காயம், இட்டு நன்றாக அரைத்த சட்ணியின் சிறிதளவை கஞ்சி பாத்திரத்தின் மேல் பகுதியில் இட்டு பறிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்.