Breaking News
விண்டடோஸ் 8 இயங்குதள பயன்பாடு சீனாவில் தடை
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 936
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடான விண்டோஸ் 8 இயங்குதளத்தை சீனா நாட்டில் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துளளது.
இத்தடையானது எரிசக்தியை சேமிப்பதற்கான ஒரு நடவடிக்கையின் ஆரம்பக்கட்டம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆயினும் நாட்டின் பாதுகாப்பை கருதியே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக மைக்ரோசொவ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்;
சீனாவின் இத்திடீர் முடிவு தமக்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் எனினும் தொடர்ந்தும் தமது மென்பொருட்களை சீனாவுக்கு விநியோகிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.