Switch Language:   English | தமிழ்

    சட்டர்லைட் தொழில்நுட்பத்தின் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் கூகுள்

    சில மாதங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் Drone வகை சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்தி இணைய வசதியை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தமை தெரிந்ததே.

    இந்நிலையில் தற்போது சட்டர்லைட் தொழில்நுட்பத்தின் மூலம் இணைய வசதியினை வழங்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்யும் கூகுள் நிறுவனம் 180 சட்டர்லைட்களை விண்ணில் நிலைநிறுத்தவுள்ளதுடன், அவை தற்போதுள்ள ஏனைய சட்டர்லைட்களை விடவும் பூமியிலிருந்து குறைந்தளவு உயரத்திலேயே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் ஆரம்ப கட்ட செலவாகவே ஒரு பில்லியன் டொலர்கள் காணப்படுவதுடன் எதிர்காலத்தில் இத்தொகை 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.