உங்க தலைமுடி பரட்டை தலைபோல அசிங்கமா இருக்கா? அப்ப 'இந்த' 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 90
உங்க முடி அதிகமாக வறண்டு காணப்படுகிறதா? முடி ஈரப்பத்தை இழந்து பரட்டை தலை போல தோற்றமளிக்கிறதா? உங்கள் முடியை எப்படி பராமரிப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லையா? இனி கவலையை விடுங்க!
உங்களின் அழகான தோற்றத்தில் உங்கள் தலைமுடியும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பலான மக்கள் தினமும் பல்வேறு தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக வறண்ட முடி மற்றும் உதிர்ந்த முடியை கையாள்வது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தலாம்.
கட்டுக்கடங்காத உங்கள் முடியை பட்டு மேனிபோல் பாதுகாப்பதற்கு உதவும் சில எளிய தந்திரங்களை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த தந்திரங்கள் மிகவும் எளிதானவை, அவற்றை உங்கள் அன்றாட வழக்கத்தில் சிரமமின்றி இணைக்கலாம்.
நீரேற்றம் முக்கியமானது
உங்களை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தலைமுடியை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கவும், ஈரப்பதமூட்டும் ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தவும். அப்படி செய்யும்போது, இயற்கையாகவே உங்கள் முடி மென்மையாக மாறும்.
சூடான நீர் வேண்டாம்
சூடான நீரில் உங்கள் தலைமுடியை அலச வேண்டாம். உங்கள் தலைமுடி வறண்டு போவதையும், உதிர்வதையும் தடுக்க உங்கள் தலைமுடியை குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
வழக்கமான எண்ணெய் மசாஜ்கள்
உங்கள் தலைமுடி பராமரிப்பில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பளபளப்பான முடியை பெறவும் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது. முடிக்கு ஊட்டமளிக்க தேங்காய், ஆர்கன் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.
சரியான தூரிகையைத் தேர்ந்தெடுங்கள்
தேவையற்ற முடி உடைப்பு மற்றும் சுருட்டையைத் தவிர்க்க, பரந்த-பல் சீப்பு அல்லது பெரிய பற்கள் கொண்ட தூரிகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முடியில் இருக்கும் சிக்கல்களை எடுக்க அகன்ற பற்கள் கொண்ட சீப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
சல்பேட்டுகள் வேண்டாம்
உங்கள் தலைமுடி அதிகமாக உலர்த்தப்படுவதைத் தடுக்க சல்பேட் இல்லாத ஷாம்புகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதிகமாக முடியை அலச வேண்டாம்
ஒவ்வொரு நாளும் உங்கள் தலைமுடியை அலச வேண்டும். ஏனெனில், இவை உங்கள் தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணெய்களை அகற்றும். இதனால் முடி வறண்டு காணப்படும். வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடியை அலசலாம்.
பட்டு தலையணை உறைகள்
உங்கள் தலைமுடி பராமரிப்பில் நீங்கள் பயன்படுத்தும் தலையணையும் ஓர் பங்கு வகிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பட்டு அல்லது சாடின் தலையணை உறைகளை பயன்படுத்துங்கள். அவை உங்கள் தலைமுடியை மென்மையாக்குகின்றன. இது முடி சிக்கலாகவும், முடி உதிர்வதையும் தடுக்க உதவும்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்குகள்
தயிர், தேன் மற்றும் கற்றாழை போன்ற பொருட்களுடன் கூடிய சில ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்தலாம். இவை உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக்குவதற்கும் மென்மையாக்குவதற்கும் உதவும். எப்போதும் இயற்கையான ஹேர் மாஸ்க்கையே பயன்படுத்துங்கள்.