Switch Language:   English | தமிழ்

    பூமியை நோக்கி வரும் அதிவேக சூரியப் புயல்: நடக்கப்போவது என்ன!!

    பூமியை நோக்கி மணிக்கு 4.02 மில்லியன் கிலோ மீற்றர் வேகத்தில் வலுவான சூரியப் புயல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    கொலராடோவில்(Colarado) உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் டாம் பெர்ஜர் இதுபற்றி கூறுகையில்;

    சூரியனின் மையப் பகுதியிலிருந்து புறப்படும் இந்தச் சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இத்தகைய புயல் பூமிக்கு வருவது என்பது மிகவும் அரிதான நிகழ்வுதான் என்ற போதிலும், நாளை இது பூமிக்கு அருகே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நோக்கி வரும் இந்த சூரியப் புயல் பார்க்க சக்தி வாய்ந்ததாகத் தெரிகிறது.

    இந்த புயலினால் பூமியின் காந்தப் புலத்தில் மாற்றங்கள் ஏற்படலாம், மின் வினியோக அமைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதோடு செயற்கை கோள்கள், ரேடியோ ஒலிபரப்புகளில் சிறிய அளவு தொந்தரவு ஏற்படலாம்.

    மேலும், சூரியப் புயல்கள் சூரிய சுழற்சியின் உச்சத்தில் ஏற்படுவது, இது பொதுவாக மக்களுக்கு ஊறு விளைவிப்பது இல்லை.

    ஆனால் இந்த முறை சூரியனில் பெரும் காந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், அதன் திசை நம்மை நோக்கி நேராக இருப்பதால், பூமியின் காந்தப் புலத்தில் தொந்தரவுகள் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.