Switch Language:   English | தமிழ்

    நாசாவின் பறக்கும் விண்வெளி ஆய்வு மையம்

    நாசா விண்வெளி ஆய்வு மையம் உலகின் முதல் பறக்கும் விண்வெளி ஆய்வு கூடத்தை உருவாக்கி சாதனை புரிந்துள்ளது.

    விஞ்ஞானிகள் நட்சத்திரங்களை பற்றி ஆய்வு செய்ய புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி விஞ்ஞானிகள் இதற்காக மாற்றி வடிவமைக்கப்பட்ட போயிங் 747 ரக ஜெட்லைனர் விமானத்தில் 8 அடி விட்ட பரப்பளவில் 17 டன் எடை கொண்ட தொலைநோக்கியை பொருத்தியுள்ளனர்.

    இந்த விமானம் பூமியில் இருந்து 7,624 மைல்களுக்கு அப்பால் அந்தரத்தில் பறக்கும். மேலும் 12 மணிநேரத்திற்கு மேலாக அசையாமல் நிற்கும் திறனுடையது.

    சோபியா (ஸ்டிரட்டோஸ்பெரிக் அப்சர்வேட்டரி ஃபார் இன்ப்ராரெட் அஸ்ட்ரானமி) என்றழைக்கப்படும் இந்த அகச்சிவப்புகதிர் தொலைநோக்கியை போயிங் விமானத்தின் பின் பகுதியில் உள்ள ஸ்லைடிங் டோரில் கண்ணாடி மூலம் வானத்தை பார்க்கும் வகையில் நிறுத்தி உள்ளனர்.

    இது பற்றி நாசா கூறுகையில், சோபியா அனுப்பும் தகவல்களை வானியல் கருவிகளாலும் நிலத்திலோ அல்லது விண்வெளியிலோ பெற முடியாது.

    சோபியா ஒரு மொபைலை போன்றது. சூப்பர்நோவா, வால்மீன்கள் போன்ற மாறிக்கொண்டேயிருக்கும் விண்வெளியின் நிகழ்வுகளை அதனால் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

    அதில் ஏதாவது பழுது ஏற்பட்டால் தேவைப்படும்பொழுது அதனுடைய புரோகிராம்களை மறுபடியும் மாற்றி எழுதி பழுதை சரிசெய்ய முடியும் என்று கூறியுள்ளது.