Switch Language:   English | தமிழ்

    செவ்வாயில் தன்னிச்சையாக செயற்பட கூடிய விண்கலம்

    செவ்வாய்க் கிரகத்தில் தனது 369 ஆவது செவ்வாய் தினத்தைக் கடந்த மனிதனால் அனுப்பப் பட்ட ரோபோட்டிக் விண்கலமாக கியூரியோசிட்டி றோவர் முதன்முறையாக அங்கு தன்னிச்சையாக செயற்பட ஆரம்பித்துள்ளது.

    அதாவது செவ்வாயின் தரையில் எவ்வாறு நகர்வது என்பதை அது சுயமாக முடிவு செய்யவுள்ளது.

    மேலும் சமீபத்தில் செவ்வாயின் துணைக் கிரகமான போபோஸ் சூரியனுக்கும் செவ்வாய்க்கும் இடையே வந்த போது ஏற்பட்ட கிரகணத்தின் அபூர்வ படங்களையும் தெளிவாகப் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இப்புகைப்படங்கள் யாவும் றோவரின் டெலிபோட்டோ வில்லைகளினால் (telephoto lens) எடுக்கப் பட்டவையாகும்.

    இரு துணைக்கிரகங்களைக் கொண்டுள்ள செவ்வாய்க்கிரகத்தின் மிகப் பெரிய துணைக்கோள் போபோஸ் (Phobos) ஆகும். மேலும் போபோஸ் துணைக் கோள் சந்திரனைப் போல் திருத்தமான கோளமாக அல்லாததாலும் அளவில் சிறியது என்பதாலும் இதனால் ஏற்பட்ட சூரிய கிரகணத்தில் பூமியில் நிகழ்வது போன்று கிட்டத்தட்ட சூரியனை முழுமையாக மறைக்க இக் கிரகணத்தால் முடியவில்லை.

    மேலும் இக்கிரகணம் நிகழ்ந்த வேளையில் மூன்று செக்கன்களுக்குள் ஏற்பட்ட மாற்றத்தினை கியூரியோசிட்டி படம் எடுத்து அனுப்பியுள்ளது. போபோஸ் இனால் மேற்கொள்ளப் பட்ட இந்த அவதானங்கள் இச் சந்திரனின் ஒழுக்கு குறித்து மிகச் சரியான கணிப்புக்களை மேற்கொள்ள வானியலாளர்களுக்கு உதவும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.