Switch Language:   English | தமிழ்

    புகைப்பிடித்தால் ஆயுளில் 10 ஆண்டுகள் குறையுமாம்

    புகை பிடித்தால் ஆயுள் குறையுமென பல ஆய்வுகள் தெரிவித்தாலும், 10 ஆண்டுகள் வரை ஆயுள் குறையும் வாய்ப்புகள் தற்போது அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உடல் நலக் கோளாறுகள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அதன் பாதிப்புகள் மக்கள் நினைப்பதைவிட மிக மோசமாக உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

    புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சாக்ஸ் ஆய்வகத்தில் பேராசிரியர் எமிலி பாங்க்ஸ் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வில், புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட 2 லட்சம் பேர் 4 ஆண்டுகளாக பரிசோதிக்கபட்டு வந்தனர்.

    இந்த ஆய்வின் முடிவில், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சராசரியாக 10 ஆண்டுகள் வரை ஆயுள் குறையும் என தெரியவந்தது.

    புகைப்பழக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஆய்வில், கர்ப்பிணி பெண்கள் புகைப்பிடித்தால், கருவில் இருக்கும் குழந்தைக்கு சிறிய அளவில் மூளை இருக்குமென்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.