Breaking News
உலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016
- Editor
- Category: விசேட தினங்கள்
- Hits: 513
பொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்
இருளகற்ற ஏங்குகின்ற மக்கள் உருவம்
சிதைந்து உலகத்தில் ஏழையாய் என்றும்
வதைதல் வறுமை விதிப்பு.
செல்வம் கொழிக்கும் சிறப்பான வாழ்விருக்க
சொல்லி செயல்புரிய சேவகர் எல்லாம்
இருந்தும் மழலை தவமிருக்கும் ஏழை
வருந்துகின்ற சீமான் மனசு.
பெற்று வளர்த்து பெருவாழ்வு வாழ்தற்கு
கற்றோராய் ஆக்கி கரைசேர்த்த பெற்றோர்
முதியோர் மடத்திலே அன்பில்லா ஏழையாய்
விதிநொந்து வாழ்தல் வடு.