Breaking News
தந்தையர் தின வாழ்த்து!...
- Editor
- Category: விசேட தினங்கள்
- Hits: 1419
19th June 2016.......
பாலூட்டித் தாலாட்டிப்
பாசம் பொழிந்ததால்
தாயன்பு பெரிதெனக்
கொண்டாடுகின்றோம்!
உண்மைதான் இருந்தும்
தன்னிலை காட்டாது
நெஞ்சிலே சுமக்கின்ற
நேர்மைத் திறன் தந்தை!
தன்னைத் தொலைத்தாலும்
தான் காட்டிக் கொள்ளாமல்
பிள்ளைக்காய் வாழ்கின்ற
தந்தைக்குத் திருநாள்!
முந்திய பிள்ளைகள்
மூப்படைந்தாலும்
தந்தையை நினைக்கவே
தந்தையர் தின வாழ்த்து!...