Switch Language:   English | தமிழ்

    ZTE Blade L2 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

    ZTE நிறுவனம் தனது புதிய கைப்பேசியான Blade L2 இனை ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்துவைத்துள்ளது.

    இதேவேளை இந்த வருட இறுதிக்குள் ஏனைய நாடுகளிலும் இக்கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    5 அங்குல அளவு, 480 x 854 Pixel Resolution என்பவற்றுடன் FWVGA தொழில்நுட்பத்தின் உருவாக்கப்பட்ட தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.3GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, 1GB RAM மற்றும் 4GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

    மேலும் கூகுளின் Android 4.2 Jelly இயங்குதளத்தினை அடிப்படையாக்க கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இரட்டை சிம் வசதி, 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 0.3 மெகாபிக்சல்களை உடைய வீடியே அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா வசதியும் தரப்பட்டுள்ளது.