Switch Language:   English | தமிழ்

    Sony Xperia Z2 அதிரடியாக விலைக்குறைப்பு

    சிறந்த அன்ரோயிட் கைப்பேசிகளில் ஒன்றாகக் காணப்படும் Sony Xperia Z2 ஸமார்ட் கைப்பேசியானது Xperia Z3 கைப்பேசியின் அறிமுகத்தை தொடர்ந்து அதிரடியாக விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

    Sony Store தளத்தில் முன்னர் 749.99 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட இக்கைப்பேசியானது தற்போது 549.99 டொலர்களாக விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

    5.2 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 2.3GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad-Core Qualcomm Snapdragon 801 SoC Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

    இவற்றுடன் 20.7 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களுக்கான 2.2 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.