கூகுள் குரோமில் ஏற்படவுள்ள மாற்றம் இதோ...
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 106
உலகளவில் கோடிக்கணக்கான இணைத்தளங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இவற்றில் ஏராளமானவை பாதுகாப்பு அற்ற இணையத்தளங்கள் ஆகும். அதாவது இவற்றினூடாக கணினியில் ஊடுருவி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். எனினும் பயனர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக கூகுள் நிறுவனம் தனது இணைய உலாவியில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.
அதாவது பாதுகாப்பான இணையத்தள முகவரிகளின் முன் https எனும் பச்சை நிற எழுத்தினை தோற்றுவித்தது. இவ்வாறு காட்சிப்படுத்தப்படாமல் சிவப்பு நிறத்தில் காட்சிப்படுத்தப்படும் இணையத்தள முகவரிகள் பாதுகாப்பு அற்றவை என பயனர்கள் அறிந்துகொள்ள முடியும்.
இப்படியிருக்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய குரோம் 69 பதிப்பில் இவ் வசதி நிறுத்தப்படவுள்ளது. இதற்கு பதிலாக "Not Secure" எனும் லேபல் காட்சிப்படுத்தப்படும் என தெரிகின்றது.