Switch Language:   English | தமிழ்

    ஆப்பிளின் IOS 7 வெளியீடு

    ஆப்பிள் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) இறந்ததன் பின்னர் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களில் புதுமை எதுவும் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தற்போது வெளிவந்துள்ள ஆப்பிளின் IOS 7 தொழில்நுட்ப உலகினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிம் குக் (Tim Cook) தலைமையில் ஐஓஎஸ் 7 எனும் பெயரில் ஆப்பிளின் இயங்குதளம் வெளிவந்துள்ளது.

    இதைப்பற்றிய விரிவான தகவல்களை தருகின்றார் தொழில்நுட்ப தகவல்களை திரட்டித்தரும் ப்ளாக்கர் நண்பன். மீள்பிரசுரம் செய்ய அனுமதித்தற்கு நன்றி தெரிவித்து அப்பதிவு இங்கே! 4தமிழ்மீடியா குழுமம்.

    IOS 7 - ஆப்பிளை காப்பாற்றுமா?

    ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் CEO-வுமான ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) மறைவுக்குப் பின் ஆப்பிள் நிறுவனம் சிறிது தடுமாறியது. தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் புதுமை (Innovation) இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு முதன்முறையாக தனது ஐஓஎஸ் 7-ஆம் பதிப்பில் இயங்குதள தோற்றத்தை முழுமையாக மாற்றியுள்ளது டிம் குக் (Tim Cook) தலைமையிலான ஆப்பிள் நிறுவனம்.

    சிறப்பம்சங்கள்:

    Control Center - Airplane Mode, Wi-fi, Bluetooth போன்ற பொதுவான அமைவுகளை உடனடியாக செயல்படுத்த உதவுகிறது. திரையில் கீழிருந்து மேலே நகர்த்தி இதனை பயன்படுத்தலாம்.
        Notification Center - புதிய மெயில்கள், Missed Calls மற்றும் அப்ளிகேசன்களின் அறிவிப்புகளை காணலாம். இதனை பயன்படுத்த திரையில் மேலிருந்து கீழே நகர்த்தவும்.

    Camera - சாதாரண புகைப்படம், வீடியோ, பனோரமா புகைப்படம், சதுர அளவிலான புகைப்படம் என்று நான்கு வகை அமைவுகள் இருக்கிறது. மேலும் புகைப்படத்திற்கு வண்ணங்கள் கொடுக்க எட்டு Filters இருக்கிறது.

    Photos -நீங்கள் எடுத்துள்ள புகைப்படங்களை Moments, Collections, Years என்று மூன்றுவிதமாக பிரித்துப் பார்க்கலாம். உதாரணத்திற்கு 2012 என்பதை தேர்வு செய்தால் அந்த வருடம் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் திரையில் காட்டும்.

    Find My iPhone - தொலைந்து போன ஐபோன்களை கண்டுபிடிக்க Find My iPhone வசதி ஏற்கனவே உள்ளது. திருடர்கள் கையில் உங்கள் போன் கிடைத்தால் எளிதாக அந்த வசதியை நிறுத்திவிடலாம். இனி அந்த வசதியை நிறுத்த ஆப்பிள் ஐடியும், கடவுச்சொல்லும் வேண்டும்.

    AirDrop - உங்கள் ஐபோன்/ஐபேடிலிருந்து அருகிலிருக்கும் இன்னொரு ஐபோன்/ஐபேடிற்கு புகைப்படங்கள், வீடியோக்களை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பலாம்.

    Multitasking - ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று அப்ளிகேசன்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தலாம். Home பட்டனை இரண்டு முறை அழுத்தினால் திறந்திருக்கும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும்.

    iTunes Radio - ரேடியோ மூலம் பாடல்கள் கேட்கலாம். உங்களுக்கென்று தனி ரேடியோ ஸ்டேசன் உருவாக்கலாம்.

    மேலும் Safari உலவியையும், சிரி (Siri) அப்ளிகேசனையும் மேம்படுத்தியுள்ளது.

    இவைகளை விட முக்கியமானதொரு சிறப்பம்சம் ஐஓஎஸ் 7-ல் நேரடியாக தமிழில் எழுத தமிழ் உள்ளீடு வசதி உள்ளது.