Switch Language:   English | தமிழ்

    இன்ஸ்டாகிராமின் இணை நிறுவனர்கள் தங்கள் பதவியை திடீர் ராஜினாமா!

    இன்ஸ்டாகிராமின் இணை நிறுவனர்கள் தங்கள் பதவியை திடீர் ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில் திடீரென இன்ஸ்டாகிராமின் தலைமை நிர்வாகியான கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் இணை நிறுவனரான மைக் க்ரீகரும் இன்னும் சில வாரங்களில் பதவி விலகப் போவதாக நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

    குறித்த அறிக்கையில் அவர்கள் தங்களது ஆக்கத்திறனை புதுப்பித்துக் கொள்ளவே இந்த முடிவு என சிஸ்ட்ரோம் கூறியுள்ளார். ஆனால் தங்களின் திடீர் ராஜினாமா முடிவுக்கு என்ன காரணம் என்பதைக் குறிப்பிடவில்லை.

    சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் செயலி 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இதை பேஸ்புக் நிறுவனம் 2012ஆம் ஆண்டு ரூ. 100 கோடிக்கு வாங்கியது.

    மேலும் இது உருவாக்கப்பட்டது முதலே அபார வளர்ச்சியை கண்ட இன்ஸ்டாகிராம் செயலியை மாதம் 100 கோடி பேர் பயன்படுத்துகின்றனர் மற்றும் 20 லட்சத்துக்கும் அதிகமான விளம்பரதாரர்களும் இதில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.