Switch Language:   English | தமிழ்

    நடக்க முடியாத ஆமைக்கு வீல் சேர் பொருத்திய டாக்டர்

    மேரிலாண்ட்,அமெரிக்காவில் மேரிலேண்ட் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த ஜூலை மாதத்தில் ஒரு ஆமை எங்கேயோ போய் முட்டிக் கொண்டது. இதனால் அந்த ஆமைக்கு உடலெங்கும் ஒரே காயங்கள். இதை கண்டுபிடித்த அந்த ஊழியர்கள் அந்த ஆமைக்கு பூங்காவிலேயே இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆமைக்கு எல்லான் பிரான்சன் என்பவர் சிகிச்சை அளித்தார். ஆனாலும் ஆமைக்கு காயங்கள் குணமாகவே இல்லை. அதனால் ஆமைக்கு ஆபரேஷன் செய்யலாம் என டாக்டர் முடிவு செய்து அதற்காக ஆமைக்கு இரும்பு தகடு பொருத்தி அந்த ஆபரேஷனை செய்தார்கள்.

    அதன் பின்னரும் ஆமைக்கு பின்னங்கால்கள் ரொம்ப மோசமாகி விட்டது. கால்களை எடுத்து வைத்து நடக்கவே முடியவில்லை. அதனால் மிகவும் சிரமப்பட்டது. மீண்டும் என்ன செய்யலாம் என டாக்டர் சிந்தனையில் மூழ்கினார். ஆமைக்கு செயற்கை கால்கள் பொருத்த முடியாது என்பதால் ஆமைக்கு வீல் சேர் ஒன்றை வடிமைத்து தந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

    அதற்காக கால்நடை மருத்துவம் படித்து வரும் ஒரு மாணவனிடம் உதவி கேட்டார் டாக்டர். அந்த மாணவன் இப்போதுதான் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். உடனே மாணவனும் அந்த வீல் சேருக்கு ஒரு டிசைன் செய்து டாக்டரிடம் காட்டியுள்ளார். இந்த படத்தை வாங்கி கொண்ட டாக்டர், சமூக ஆர்வலர் ஒருவரது உதவியுடன் வீல் சேல் செய்ய துவங்கினார். ஒருவழியாக ஆமைக்கு வீல் சேர் ரெடியானது. அந்த வீல் சேரை வைத்து ஆமைக்கு மீண்டும் டாக்டர் ஒரு ஆபரேஷனை செய்து அந்த வீல் சேரை பொருத்தினார். இப்போது ஆமை வீல் சேர் உதவியுடன் ஹாயாக அந்த பூங்காவை சுற்றி வருகிறது.