Switch Language:   English | தமிழ்

    இரண்டு தலையுடன் பிறந்த அதிசய குழந்தை

    ராஜஸ்தான் மாநிலத்தில் சாதத் மருத்துவமனையில் இரண்டு தலையுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
    கடந்த 24ம் தேதி பிறந்த இந்தக் குழந்தை மிகவும் அபூர்வமான விஷயம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    உடனடியாக இந்தக் குழந்தையையும் மற்றும் அதன் தாயையும் ஜெய்பூரில் உள்ள ஜேகே லான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
    குழந்தையை எக்ஸ்-ரே எடுத்த மருத்துவர்கள், இக்குழந்தைக்கு இரண்டு தலையுடன், இரண்டு முதுகெலும்பு, இரண்டு நரம்பியல் மண்டலம், இரண்டு கால்கள், இரண்டு கைகள், ஒரே ஒரு இடுப்பு எலும்பு காணப்பட்டுள்ளது.
    மிகவும் அபூர்வமாக பிறந்த இந்தக் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.