6,000 வருடங்கள் பழமை வாய்ந்த முதல் வானியல் தொலைகாட்டி!
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 340
வரலாற்றுக்கு முற்பட்ட கல்லறைகள் இறந்த உடல்களை அடக்கம் செய்வதையும் தாண்டி மேலும் பல பயன்களை கொடுத்திருப்பது தெரியவருகிறது.
இதன்படி லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து போர்த்துக்கல்லில் கண்டுபிடிக்கப்பட்ட 6,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்லறையொன்று அக்காலங்களில் வில்லைகளற்ற வானியல் தொலைகாட்டியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அதன் சுரங்க பார்வை விளைவு வானியல் பொருட்களை இலகுவாக அவதானிக்க உதவியிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. இங்குள்ள நீண்ட நடைபாதை தொலைகாட்டியின் நீள் குழாய் போன்று காணப்படுவதால் இதன் மூலம் வானத்தை பார்க்க கூடியதாக அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது விஞ்ஞானிகள் கருத்து.
இதன் வடிவமைப்பு ஆகாயத்தின் குறித்த திசையை மட்டும் நோக்கக் கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்றைய திசைகள் அடைக்கப்பட்டுள்ளது.
மூடியடைக்கப்பட்டுள்ள பெருங்கற்கள் இருளான தன்மையை கொடுக்கிறது. இதனால் மங்கலான தொலைவிலுள்ள நட்சத்திரங்களையும் இலகுவாக பார்க்க முடியும் என சொல்லப்படுகிறது.
இது அக் கால மக்களால் காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களை அறிந்து கொள்ள பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தேசிய வானியல் கூட்டம் ஒன்றிலேயே இது தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.