வேலையை விரைவாக பெற வேண்டுமா? இதை பின்பற்றுங்கள் !
- admin
- Category: ஆலோசனை
- Hits: 131
நாம் விரும்பும் வேலை கிடைப்பதற்காக பல வழிகளில் முயற்சிக்கிறோம். நமது தோற்றம், விண்ணப்பிக்கும் முறை, Resume Format போன்றவற்றையும் வேலை பெறுவதற்காக மாற்றிக் கொள்கிறோம். ஏன், சில சமயங்களில் எவ்வளவு நாட்கள் தான் வேலை தேடுவது? என்பதற்காக வேலை கிடைத்தால் போதும் என்று ஏதோ ஒரு வேலைக்கு செல்கிறோம். இன்று நாம் வேலையை விரைவாக பெறுவதற்காக சில குறிப்புகளை பார்ப்போம்.
? அனைத்து வேலை வாய்ப்புகளுக்கும் விண்ணப்பிக்காதீர்கள். நீங்கள் பணிபுரிய விரும்பும் துறைக்கு மட்டும் விண்ணப்பியுங்கள்.
? ஒருவேளை நீங்கள் விண்ணப்பித்த வேலையில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் மீண்டும் அந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள். அதில் தவறு எதுவும் இல்லை.
? உங்களது Resume-ஐ நீங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும்.
? ஒருவேளை உங்களுக்கு நிறைய வேலை அனுபவங்கள் இருந்தால் அவை அனைத்தையும் Resume-ல் குறிப்பிட வேண்டும் என்பதில்லை. நீங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கு உகந்தவாறு உங்களது அனுபவங்களை குறிப்பிட்டால் போதுமானது.
? நீங்கள் உடுத்தும் உடையானது ஒரு முதலாளியை போலவோ அல்லது ஒரு வெற்றியாளரை போலவோ இருக்க வேண்டும்.
? எந்த இடமாக இருந்தாலும் சரி நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். அதாவது இயல்பாக இருக்க வேண்டும். பிறருக்காக உங்களது நடவடிக்கைகள் பொய்யாக மாறிவிடக் கூடாது.
? உங்களது அனுபவங்களை நேர்காணலில் சாதரணமாக கூறுவதை விட சூழ்நிலையை எடுத்துரைக்கும் வகையில் கூறுவது நன்று.
? நீங்கள் பணிபுரிந்த முந்தைய நிறுவனத்தை பற்றி குறையோ அல்லது தவறுகளையோ கூறாதீர்கள்.
? நேர்காணல் முடிந்த பிறகு நன்றி குறிப்பை அனுப்ப மறவாதீர்கள். நீங்கள் ஏதேனும் கூற மறந்து இருந்தால் அதை வெளிப்படுத்த இது ஒரு அரிய வாய்ப்பாகும்.