Switch Language:   English | தமிழ்

    வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவதற்கு என்ன காரணம்?

    வாழ்க்கையில் சிலர் அதிக மகிழ்ச்சியாகவும், சிலர் எப்போதுமே கவலை கொண்டவராகவும் இருப்பதை காண முடிகிறது.

    இதற்கு முக்கிய காரணம் என்ன? என்பது குறித்து இங்கிலாந்து நாட்டில் லண்டனிலுள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சுமார் 6,870 பேரை அணுகி ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் மகிழ்ச்சியின் பின்னணியில் விவேகமாக சிந்திக்க கூடிய அறிவுத்திறன் இருப்பதே காரணம் என கண்டுபிடித்தார்கள்.

    இத்தகைய திறன் இருப்பவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்குகிறது, இந்த திறமை இல்லாதவர்கள் தான் குறைவான வருவாய், மன அமைதியின்மை ஆகியவற்றால் மகிழ்ச்சியின்றி அவதிப்படுவதாக தெரியவந்துள்ளது.