குழந்தையின் முகத்தைப் போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் Robot (Video)
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 750
குழந்தையை போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோவை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஹான்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹான்சன் என்பவர் புதிய வகை ரோபோவை தயாரித்துள்ளார்.
1 1/2 வயது குழந்தையை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு டியாகோசான் என பெயரிடப்பட்டுள்ளது.
குழந்தையை போன்று அழுவது, சிரிப்பது, புன்னகை செய்வது, கோபப்படுவது, மகிழ்ச்சி அடைவது போன்று பல்வேறு உணர்ச்சிகளை இந்த ரோபோ வெளிப்படுத்துகிறது.
இதற்கு ஏற்றாற் போன்று நெகிழும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்குகளை வைத்து ரோபோவின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோவுக்கு செயற்கை அறிவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக டேவிட் ஹான்சன் தெரிவித்துள்ளார்.