சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ
- admin
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 127
விண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவுவதற்காக புதிய ரோபோ ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.
CIMON அல்லது Crew Interactive Mobile CompanioN என குறித்த ரோபோவிற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ எவ்விதமான உதவியும் இன்றி தானாகவே அந்தரத்தில் மிதந்து நகரக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த விண்வெளி நிறுவனம் ஒன்றே குறித்த ரோபோவினை வடிவமைத்துள்ளது. இவ் ரோபோ வெறும் 5 கிலோ கிராம்கள் எடை கொண்டது. இந்த ரோபோ எதிர்வரும் ஜுன் மாதத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மேலும் இந்த ரோபோ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.