சக்தியை கடத்தக்கூடிய துணிக்கையை உருவாக்கி அசத்திய விஞ்ஞானிகள்!
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 287
இன்றைய தொழில்நுட்ப உலகில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது எனர்ஜியை கடத்தக்கூடிய துணிக்கையினை (Particles) அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
Topological Plexcitons எனப்படும் இத் துணிக்கைகள் சோலார் கலங்களிலும், போட்டோன் சுற்றுக்களிலும் எனர்ஜியை கடத்தக்கூடியதாக காணப்படுகின்றது.
Exciton Energy Transfer (EET) எனும் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி எனர்ஜி கடத்தலை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை கலிபோர்னியா மற்றும் சான் டிகோ பல்கலைக்கழக குழுக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
இதன்போதே மேற்கூறப்பட்ட துணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், உலோகத்தின் ஊடாக ஒளி கடத்தப்படும் போது எனர்ஜி முன் நோக்கியும், மூலக்கூறுகளில் ஒளி கடத்தப்படும்போது எனர்ஜி பின் நோக்கியும் கடத்தப்படுகின்றது என இக்குழுவில் இணைந்த பணியாற்றும் Yuen-Zhou என்பவர் தெரிவித்துள்ளார்.