உலகின் மிகச் சிறிய இயந்திரம்!
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 345
உலகின் மிகச் சிறிய இயந்திரம்! கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் சாதனை
பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தாங்கள் உலகின் மிகச் சிறிய இயந்திரத்தை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த குட்டியூண்டு இயந்திரம் ஒரு எறும்பின் அளவைவிட, 10 லட்சம் மடங்கு சிறியது. லேசர் கதிர்கள், தங்க துகள்கள் மற்றும் இயற்பியல் விதியான, 'வான் டெர் வால்ஸ்' சக்திகள் ஆகியவற்றின் மூலம் இந்த குட்டி இயந்திரம் இயங்குகிறது.
'ஆக்சுவேட்டிங் நேனோ-டிரான்ஸ்டியூசர்ஸ்' என்ற சொற்றொடரின் முதல் எழுத்தை வைத்து இந்த இயந்திரத்திற்கு, 'ஆன்ட்' என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். மிகச் சிறிய அளவே இருந்தாலும், இந்த இயந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது.
'இந்த இயந்திரத்திலிருந்து 10 நேனோ -நியூட்டன் சக்தி கிடைக்கிறது' என்று இந்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் ஜெரெமி பாம்பெர்க் 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழுக்கு தெரிவித்திருக்கிறார். 'நீராவி இயந்திரத்தில் பிஸ்டன் இயங்குவதைப் போல, நேனோ இயந்திரம் ஒன்றை உருவாக்கி, அது தன் ஆற்றலை ஒரு திசையில் செலுத்தி இயங்குமா என்று சோதிப்பதே இந்த ஆய்வின் நோக்கம்' என்று ஜெரெமி தெரிவித்தார்.
இப்போதைக்கு அந்த இயந்திரத்தின் சக்தி, நாலாபக்கமும் சிதறுவதாகவும், விரைவில் அதை ஒரு திசையில் செலுத்தும்படி மேம்படுத்தினால், அது வருங்காலத்தில் பல துறைகளில் பயன்படும் என்றும் அவர் தெரிவித்தார்.