Switch Language:   English | தமிழ்

    உடல் உறுப்புக்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்

    உடல் உறுப்புக்களை மாற்றம் செய்யும் போது அவை பழுதடையாமல் இருப்பதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றினை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

    Supercooling எனப்படும் இத்தொழில்நுட்பமானது உடல் உறுப்புக்களை குளிரூட்டிய நிலையில் வைத்திருப்பதுடன், ஊட்டச்சத்துக்களையும், ஒக்ஸிஜன் வாயுவையும் குருதிக்கலன்களூடாக செலுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

    இத்தொழில்நுட்பத்தின் ஊடாக எலியின் ஈரலைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது அது 3 நாட்கள் வரையில் பழுதடையமால் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதேவேளை தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் அதிக பட்சமாக 24 மணித்தியாலங்கள் வரை மட்டுமே உடல் உறுப்புக்களை பழுதடையாது பாதுகாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.