தலைமுடியிலும் 100 மடங்கு சூரியக்கலங்கள் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 311
சூரியசக்தி தற்காலத்தில் அதிகளவில் பாவனையில் உள்ள ஒன்று. ஆனாலும் பயன்பாட்டிலுள்ள சூரியக் கலங்களோ பருமனில் பெரியது, நிறை கூடியது.
தற்போது மிகச்சிறிய ஒளிமின்னழுத்த கலங்கள் தென் கொரிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
இவை வளைக்கப்படக் கூடியவை, பென்சிலை சுற்றி கட்டப்படக் கூடியவை. இது பற்றி விஞ்ஞானி Jongho Lee தெரிவிக்கையில் கிட்டத்தட்ட 1 மைக்ரோமீட்டர் தடிப்புடைய இது மனித தலை முடியிலும் மிக சிறியது என்கிறார்.
சாதரணமாக மனித தலை முடியானது 10 – 300 மைக்ரோமீட்டர் தடிப்புடையது. இப்போது உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா அது எவ்வளவு சிறியது என்பதை?
அதேவேளை தற்போது பயன்பாட்டிலுள்ள ஒளிமின்னளுத்த கலங்களிலும் 100 மடங்கு சிறியது. அதன் திணிவும் சிறியது. இச்சிறிய கலங்கள் வளைக்கப்படும் போது முறியும் தகவு குறைந்தவை. அத்துடன் இவை மிக அதிகளவான சக்திறை உறிஞ்சுவதாகவும் தெருவிக்கப்படுகிறது.
இப் புதிய கண்டுபிடிப்பானது வருங்காலத்தில் நுண்ணிய இலத்திரனியல் பொருட்களில் இக்கலங்கள் பொருத்தப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதுடன் மேலும் பல புரட்சிகளை ஏற்படுத்தப்போவது நிச்சயம்.