Switch Language:   English | தமிழ்

    விஜய் சேதுபதி உள்ளடங்களாக‌ 11 பேருக்கு பெரியார் விருது!

    1995ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் ‘பெரியார் விருது’ வழங்கப்படுகிறது. இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு பொங்கல் திருநாளையொட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி, கவிஞர் செவ்வியன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான், சென்னை முன்னாள் மேயரும், மராத்தான் வீரருமான சைதை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன், இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன், கவிஞர் சல்மா, ஓவியர் அபராஜிதன் ஆகிய 11 பேருக்கு 2018-ம் ஆண்டிற்கான ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதுகளை தி.க. தலைவர் வீரமணி அறிவித்தார். இந்த விருது வழங்கும் விழா ஜனவரி 15, 16 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறுகிறது.