Switch Language:   English | தமிழ்

    வெள்ளரிக்காய் சாறை முகத்தில் 'இப்படி' யூஸ் பண்ணுங்க... உங்க முகத்திலுள்ள கரும்புள்ளிகள் நீங்கும்!

    பருக்கள், கரும்புள்ளிகள் இல்லாத பொலிவான சருமத்தை பெற ஆண், பெண் என நாம் அனைவரும் விரும்புவோம். பளபளப்பான பொலிவான நிறத்தை நீங்கள் பெற நினைத்தால், உங்கள் சமையலறையிலிருந்து நேரடியாக ஒரு பொருளை நீங்கள் முகத்திற்கு பயன்படுத்தலாம்.

    உங்கள் சாலட்டில் அடிக்கடி காணப்படும் வெள்ளரிதான் அது. வெள்ளரிக்காய் உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும். கூடுதலாக, இது ஒரு பழமையான அழகு பராமரிப்பு பொருள். பண்டைய காலம் முதல் பல தலைமுறைகளாக வெள்ளரிக்காய் சரும பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இது எந்த பக்கவிளைவுகளையும் உங்கள் சருமத்திற்கு ஏற்படுத்தாது. பளபளப்பான சருமப் பராமரிப்புக்கு வெள்ளரிக்காய் சாற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

    தோல் பொலிவு

    பளபளப்பான பிரகாசமான சரும நிறத்தை பெற நீங்கள் ஆசைப்பட்டால், வெள்ளரிக்காய் சாறு உங்களுக்கான தீர்வு. இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சிலிக்காவால் நிரம்பியுள்ளது, இது உங்கள் சருமத்தை புத்துயிர் பெற உதவுகிறது மற்றும் பிரகாசமான சருமத்தை உங்களுக்கு வழங்கும்.

    எப்படி பயன்படுத்துவது?

    வெள்ளரி சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் வெள்ளரிக்காயின் இனிமையான பண்புகள் உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றும்.

    கரும்புள்ளிகள்

    பெரும்பலான மக்கள் எதிர்கொள்ளும் ஓர் முக்கிய சரும பிரச்சனை கரும்புள்ளி. கரும்புள்ளிகள் உங்கள் முக அழகை சீர்குலைப்பதால், அது உங்கள் தன்மைபிக்கையை குறைக்கும். ஆனால் வருத்தப்பட வேண்டாம். வெள்ளரிக்காய் சாறு இயற்கையான ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது, இது அந்த தொல்லை தரும் புள்ளிகளை போக்க உதவும்.

    எப்படி பயன்படுத்துவது?

    வெள்ளரி சாற்றுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். இந்த பேஸ்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தை கழுவ வேண்டும். மஞ்சள் கரும்புள்ளிகளை போக்கவும், வெள்ளரி உங்கள் சருமத்தை ஆற்றவும் உதவும்.

    நீரேற்றம்

    உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பது பொலிவான நிறத்திற்கு முக்கியமாகும். வெள்ளரியில் 95% நீர் உள்ளது, இது ஒரு சிறந்த இயற்கை ஹைட்ரேட்டராக அமைகிறது. வெள்ளரிக்காயை நீங்கள் அப்படியேவும் சாப்பிடலாம்.

    எப்படி பயன்படுத்துவது?

    வெள்ளரிக்காய் சாற்றை ரோஸ் வாட்டருடன் கலந்து புத்துணர்ச்சியூட்டும் வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்கை உருவாக்க வேண்டும். உங்கள் சருமத்தை நீரேற்றமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க நாள் முழுவதும் அதை உங்கள் முகத்தில் தடவ வேண்டும். வெப்பமான இந்திய கோடை காலத்தில் இது மிகவும் உதவியாக இருக்கும்.

    வீக்கத்திற்கான கண் மாஸ்க்

    உங்கள் கண்கள் வீங்கி இருக்கிறதா? நீங்கள் சோர்வாக உணர்கிறீர்களா? அப்படியென்றால், கண்களுக்கு மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வெட்டி வையுங்கள். இது கண்களுக்கு குளிர்ச்சியை வழங்கும். உண்மையிலேயே சருமத்திற்கும் உடலுக்கும் குளிர்ச்சியை வழங்குகிறது.

    எப்படி பயன்படுத்துவது?

    வெள்ளரிக்காயை இரண்டு துண்டுகளாக நறுக்கி, மூடிய கண்களுக்கு மேல் வைத்து, 15 நிமிடங்கள் அப்படியே ஒய்வு எடுக்க வேண்டும். வெள்ளரிக்காயின் குளிர்ச்சி விளைவு வீக்கத்தைக் குறைத்து, உங்கள் கண்களை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.

    பொறுப்புத் துறப்பு: ஒவ்வொருவரின் சருமமும் தனித்துவமானது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எந்தவொரு புதிய தோல் பராமரிப்பு தீர்வையும் முயற்சிக்கும் முன், குறிப்பாக உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த தோல் அல்லது அறியப்பட்ட ஒவ்வாமை இருந்தால், பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.