Switch Language:   English | தமிழ்

    உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துளசி!

    நம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே துளசியானது, மிகச் சிறந்த மூலிகைப் பொருளாக அனைவருக்கும் பயன்படுகிறது.

    துளசி இலையை சாதாரணமாக மென்று சாப்பிட்டால் சுவாசக் கோளாறுகள் மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.

    உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துளசியை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம்.

    1. தினமும் துளசி இலைகளை 4-5 என உண்டு வந்தால் சர்க்கரையை நோயை விரைவில் குணப்படுத்தலாம்.

    2. தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசியை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை சீராக்கி கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது

    3. தினமும் துளசி சாப்பிடுவதால் உடலில் செரிமானப்பிரச்சனை நீக்கி விடலாம். மேலும் சிறிதளவு துளசி இலையுடன் இஞ்சி கலந்து அரைத்து சாறு எடுத்து குடித்தால் வயிறு பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

    4. தினமும் காலையில் எழுந்ததும் துளசி இலை சாப்பிட்டு வந்தால் கெட்ட நாற்றம் வருவதை சரி செய்யலாம். துளசி இலையுடன் கடுகு எண்ணெயுடன் கலந்து ஈறுகளில் தடவி வந்தால் பல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கலாம்.

    5. ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அதில் பத்து துளசி இலைகளை சேர்த்திடுங்கள் .பின்னர் அந்த தண்ணீரை எடுத்துக்குடித்திடுங்கள். அல்லது துளசி இலையை மைய அரைத்து தலையில் பற்று போல போடலாம்.

    6. இருமல் மற்றும் கடுமையான சளியினால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள்.

    7. கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்.

    8. மன அழுத்தத்தை உண்டாக்குகிற கோரிடிஸோல் என்கிற ஹார்மோனை அதிகரிக்காமல் செய்யும் ஆற்றல் துளைசியில் இருக்கிறது. எனவே மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க தினமும் பத்து முதல் பன்னிரெண்டு இலைகளை சாப்பிடுங்கள்.

    9. துளசியில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி கார்சினோஜெனிக் துகள்கள் நிறையவே இருக்கின்றன. இது மார்பக புற்றுநோய் மற்றும் வாய்ப்புற்றுநோய் வராமல் தவிர்க்க உதவுகிறது. இவை புற்றுநோய் கட்டிகள் வளார்மல் தடுத்திடும்.
     
    10. தினமும் காலையில் துளசிச் இலைச் சாறு இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து இதனை ஆறு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இவை கிட்னியில் கற்கள் உருவாகாமல் தடுத்திடும்.